நிலைபேணத்தகு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம், ஒவ்வொரு அடியாக முன்னேறுவோம்!
சூழலைப் பாதுகாப்பதிலும், சமூகத்தின் நலன் மீதும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்
சூழலைப் பாதுகாப்பதிலும், சமூகத்தின் நலன் மீதும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்
சூழல்நேய நடைமுறைகளை அமுல்படுத்தல், சுற்றுச்சூழல் மீதான எமது அடிச்சுவட்டைக் குறைத்தல், சமூக முயற்சிகள் மூலமாக சமூகங்களுடன் தீவிரமான ஈடுபாடுகளை முன்னெடுத்தல், எமது நிறுவன ஆட்சி நிர்வாக நடைமுறைகளில் அதியுயர் நெறிமுறை தராதரங்களை நிலைநாட்டுதல் ஆகியவற்றினூடாக ஒவ்வொரு மட்டத்திலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இந்த விழுமியங்களை எமது நிதி வணிகத்தில் ஒருங்கிணைப்பதன் மூலமாக, சிறப்பான மற்றும் நிலைபேணத்தகு எதிர்காலத்தை நாம் செதுக்கி வருகின்றோம்.
எதிர்காலத்தை சிறப்பிக்கச் செய்யும் வகையில் வணிகங்களை வளம் பெறச் செய்தல்
எமது அடிச்சுவட்டைக் குறைத்து, பசுமையான எதிர்காலத்திற்கான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளல்.
சிறப்பான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து முன்சென்று, வளம் பெறுதல்.
2026 ஜனவரி 1ம் திகதி நிதிக் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்காக எமது கிளைகளுக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி, புத்தாண்டில் எமது இதயபூர்வமான வாழ்த்துக்களை சிங்கர் ஃபினான்ஸ் தெரிவித்திருந்தது. இலங்கை மக்களின் கனவுகளையும், அபிலாஷைகளையும் வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ள ஒரு நிதி நிறுவனம் என்ற வகையில், இப்புத்தாண்டு பிறந்த தருணத்தில் "Growing Dreams 2026" என்ற முயற்சியை சிங்கர் ஃபினான்ஸ் ஆரம்பித்து வைத்தது. இந்த திட்டமானது மதிப்புமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு உதவுவது மாத்திரமன்றி, உலகில் அனைத்து மக்களுக்கும் பசுமை என்ற கனவை நனவாக்கும் பரந்த குறிக்கோளையும் கொண்டுள்ளது.நிலைபேணத்தக்க அபிவிருத்தி என்ற எமது நிறுவன நோக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாக, #SingerFinanceCares என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வகைப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் முயற்சிகளை நீண்ட காலமாக சிங்கர் ஃபினான்ஸ் முன்னெடுத்து வந்துள்ளது. 2026 புத்தாண்டின் ஆரம்பம் அத்தகைய மற்றுமொரு முயற்சியாக அமைந்துள்ளது.உன்னதமான நோக்கங்களை சிந்தனையில் கொண்டவாறு, உங்களுடைய கனவுகளை நீங்கள் நனவாக்கிக் கொள்ள உதவுவதில் சிங்கர் ஃபினான்ஸ் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. 2026 ஆம் ஆண்டில் அனைத்து வகையான வாகனங்களுக்குமான குத்தகை வசதிகள், வாகன கடன்கள், தங்கக் கடன் சேவைகள் உள்ளிட்ட பல்வகைப்பட்ட நிதிச் சேவைகளை அது வழங்கி வந்துள்ளது.
பல தசாப்தங்களாக இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள ஒரு முன்னோடி நிதிச் சேவை நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் ஃபினான்ஸ், இலங்கையில் முதல்முறையாக அறிமுகமாக்கப்பட்ட பொது விரைவுக் குறியீட்டு அடிப்படையிலான மொபைல் பண வசூல் சேவையின் இரண்டாவது ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியுள்ளது. நிதித் தீர்வுகளில் புரட்சிகரமாக மாற்றங்களை ஏற்படுத்துவதில் அதன் ஓயாத அர்ப்பணிப்பை இப்புத்தாக்கம் பிரதிபலிப்பதுடன், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வலுவூட்டுவதில் இது கவனம் செலுத்தியுள்ளது.
கனவுகளை நனவாக்க உதவும் தனது பயணத்தில் இருபது ஆண்டுகள் நிறைவை சிங்கர் ஃபினான்ஸ் 2024 இல் பெருமையுடன் கொண்டாடுகின்றது. சௌகரியமான மாதாந்த தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களினூடாக சிங்கர் நுகர்வோர் தயாரிப்புக்களைக் கொள்வனவு செய்வதற்கு அனுசரணையளிக்கும் வகையில், ஒரு நுகர்வோர் நிதி நிறுவனமாக 2004 இல் இது நிறுவப்பட்டது. அது இன்று பல்வகைப்பட்ட தீர்வுகளை வழங்கும் வலுவான நிதி நிறுவனமாக பாரிய வளர்ச்சி கண்டுள்ளது.
இலங்கையில் நிதித் தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் ஃபினான்ஸ் பிஎல்சி, அண்மையில் இடம்பெற்ற Great Place to Work (GPTW) விருது வழங்கல் வைபவத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாகவும் மதிப்பிற்குரிய 'Best Place to Work in Sri Lanka' விருதை சம்பாதித்துள்ளது.
எங்கள் தளத்தில் பாதுகாப்பான மற்றும் சீரான அனுபவத்திற்காக நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். அவை உங்கள் தரவைப் பாதுகாக்கவும், உங்கள் உள்ளடக்கம் அல்லது விளம்பரங்களைத் தனிப்பயனாக்கவும், சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை அளவிடவும், எங்கள் போக்குவரத்தை பகுப்பாய்வு செய்யவும் உதவுகின்றன. குக்கீகளைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க ‘அனைத்தையும் ஏற்றுக்கொள்’ என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது உங்கள் அமைப்புகளை சரிசெய்ய ‘நிராகரி’ என்பதைக் கிளிக் செய்யவும். எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் அறிக.