குத்தகை
குத்தகை என்பது 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி குத்தகை சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கை சந்தையில் 1980 ஆம் ஆண்டில் குத்தகை அறிமுகப்படுத்தப்பட்டதுடன் விரைவாகவே நிதியின் மாற்று வடிவமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படத் தொடங்கியது.

சிங்கர் ஃபைனான்ஸ் புத்தம் புதிய வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான குத்தகை வசதிகளை போட்டி வீதத்தில் வழங்குகிறது. எங்களிடமிருந்து தனிப்பயனாக்கப்பட்ட குத்தகை தீர்வுகளுடன் உங்கள் சொந்த குத்தகை தொகுப்பை நீங்கள் வைத்திருக்க முடியும். மிகவும் நம்பகமான நிதி நிறுவனத்திடமிருந்து மிக உயர்ந்த வாடிக்கையாளர் சேவையை அனுபவிக்க எம்மிடம் வாருங்கள்.

குத்தகை வாடகைகளை நாடு முழுவதும் அமைந்துள்ள எந்த சிங்கர் பிளஸ், சிங்கர் மெகா மற்றும் சிங்கர் ஹோம்ஸ் காட்சியறைகள் மூலமாகவும் செலுத்த முடியும். அமைவிடங்களின் முழு விபரங்களை இங்கே காணலாம். https://www.singersl.com/stores/index.asp .

LEASING

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் யாவை ?

  • கவர்ச்சிகரமான குத்தகை வட்டி வீதங்கள்
  • உங்கள் வருமானத்திற்கு ஏற்றவாறு மீளச்செலுத்தும் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் திறன்
  • பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான வசதிகள்
  • குத்தகைக்கு டாப்-அப் செய்யும் திறன்
  • வசதியின் உரிமைக் காலத்தில் சொத்தை மாற்றும் திறன்
  • கடனை மீளச் செலுத்துவதற்கான நாடளாவிய பரந்த கிளை வலையமைப்பு
  • இலவச எஸ்எம்எஸ் எச்சரிக்கை வசதிகள்

தேவையான தகுதிகள் என்ன ?

  • இலங்கையை வசிப்பிடமாகக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

நான் எப்படி ஒரு கணக்கைத் திறக்க முடியும் ?

  • விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் நாடு முழுவதும் அமைந்துள்ள எங்கள் கிளைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நேரில் வருகை தரவும் அல்லது மேலதிக விபரங்களுக்கு எங்களை அழைக்கவும் +94 112 400 400.ஆவணங்கள்

என்ன ஆவணங்கள் தேவை ?

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
  • கடந்த இரண்டு ஆண்டுகளின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் ஃ கடைசி மாதம் வரையான வரைவு கணக்குகள் அல்லது விண்ணப்பதாரரின் மாத வருமானத்தை நிரூபிக்கும் சரியான ஆவணங்கள்.
  • கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கைகள்
  • முறையாக பூரணப்படுத்தப்பட்ட உத்தரவாதமளிப்பவர்களின் அறிக்கைகள்
  • வியாபார பதிவு / கூட்டிணைத்தல் சான்றிதழ்
  • பணிப்பாளர்கள் / பங்காளர்களின் விபரங்கள்
  • பெருநிறுவன விண்ணப்பதாரர்களுக்கான நிறுவன செயலாளரால் சான்றளிக்கப்பட்ட சங்கத்தின் உறுப்புரைகள்
  • கடந்த 3 காலாண்டுகளில் NBT / VAT செலுத்திய- பற்றுச்சீட்டுகள்
  • பெருநிறுவன விண்ணப்பதாரர்களுக்கு வருமான வரி வருமானம்
  • நிரந்தர வதிவிடத்திற்கான பற்றுச்சீட்டு ஆதாரம்
  • தேசிய அடையாள அட்டை  /கடவுச் சீட்டு  /  சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதிகள்
  • விநியோகஸ்தர் விலைப்பட்டியல்